A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

கொடைக்கானலில் தொடர் மழை வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே ராட்சத மரம் விழுந்து போக்கு வரத்து பாதிப்பு சுற்றுலாப்பயணிகள் அவதி

கொடைக்கானலில் தொடர் மழை வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே ராட்சத மரம் விழுந்து போக்கு வரத்து பாதிப்பு சுற்றுலாப்பயணிகள் அவதி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது சீசன் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர் 
இந்த நிலையில் கோடைகாலத்தில் கோடை மழை பொழிவது வழக்கம்  சில நேரங்களில் சாரல் மழை மற்றும் மிதமான மழை பொழியும் 
ஆனால் தற்பொழுது இந்த வருடம் கோடைகாலத்தில் பரவலாக அவ்வப்போது இதமான மழையும் பலத்த மழையும் பெய்து வருகிறது , 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய  சாரல் மழை  நிலவி வந்த நிலையில் பிற்பகலில் சுமார் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்து வந்தது மேலும்  கொடைக்கானலில்  பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய பெய்த பலத்த மழையால் சிறு சிறு இடங்களில் மலைச்சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன இன்று இரவு  வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே புலிசோலை பகுதியில் பழமையான ராட்சத மரம்  கொடைக்கானலிருந்து   சென்னை சென்ற தனியார் ஆம்னி சொகுசு பேருந்து மீது மரம் விழுந்ததில்  பேருந்தின்  முன்  கண்ணாடி சேதம் அடைந்தது அப்போது பேருந்தில் இருந்த சுற்றுலாப்பயணிகளுக்கு சிலருக்கு லேசான சிறு சிறு காயம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து  பாதிப்பு அடைந்தது
 
கொடைக்கானல்  மலை  சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இரவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் 
 குடும்பத்துடன் சுற்றுலா வந்த சுற்றுலாப்பயணிகள் வாகனங்களிலே பல மணி நேரம் முடங்கி கிடந்தனர் மேலும் குளிரிலும் மழையிலும் சுற்றுலாப்பயணிகள் முடங்கி கிடந்ததால் சுற்றுலாப்பயணிகள் பெருமளவில்  அவதி அடைந்தனர் 
இதனை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பின்பு கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறை சார்பில் வந்த பணியாளர்கள்
சுமார் 1 மணிநேரமாக போராடி  மரத்தை அகற்றினர் மூன்று  மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து படி படியாக சீரடைய தொடங்கியது மேலும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள  அபாயகரமான  மரங்களை அகற்றுவதற்கு வனத்துறையினர் விரைந்து    நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகளின்  கோரிக்கை 

Jai -Kodaikanal Reporter - Star Asia News

Contact Details

India (chennai)
India (Madurai)
  • maduraipages@yahoo.com
  • 98658 74348
  • 52 A, Crystal Building,
    3rd Floor, H.A.K Road,
    Chinna Chokkikulam,
    Madurai - 625002
Switzerland
Canada