A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

யாத்திரையின் முதல் நாளில் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்த காஷ்மீர் ஆளுநர்

யாத்திரையின் முதல் நாளில் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்த காஷ்மீர் ஆளுநர்


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் நேற்று (28-ம் தேதி) பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் நேற்று மலயடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

114 யாத்ரீகர்கள் கொண்ட 41-வது குழுவினர் பகவதி நகர் முகாமில் இருந்து நேற்று அதிகாலை 4.20 மணியளவில் 3 வாகனங்களில் புறப்பட்டு குகைக் கோயிலுக்கு சென்றனர். இந்நிலையில், இன்று பிற்பகலில் அமர்நாத் கோவிலை அடைந்த முதல் குழுவினர் அங்கு பனி லிங்கத்தை தரிசித்தனர்.

இக்குழுவில் பங்கேற்றிருந்த ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோஹ்ரா பனி லிங்கத்தை தரிசித்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். 

மற்றொரு நிகழ்வாக, காஷ்மீர் மாநிலம் காதுவா மாவட்டத்தில் உள்ள ஜம்மு - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த யாத்ரீகர்களின் வாகனம் லாரியுடன் மோதியதில் 13 யாத்ரீகர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



Contact Details

India (chennai)
India (Madurai)
  • maduraipages@yahoo.com
  • 98658 74348
  • 52 A, Crystal Building,
    3rd Floor, H.A.K Road,
    Chinna Chokkikulam,
    Madurai - 625002
Switzerland
Canada