A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Madurai INFO

Country
:
India
State
:
Tamil Nadu
District
:
Madurai
PIN
:
625001
Area
:
3,741.73 km2
Population
:
3,038,252
Languages
:
Tamil
Timezone
:
IST (UTC+5:30)

இன்றைய நாள்

இராகு : 03:00 - 04:30
எமகண்டம் : 09:00 - 10:30
குளிகை : 12:00 - 01:30

தங்கம் வெள்ளி நிலவரம்

தங்கம்

1 கிராம் : Rs. 2746
1 பவுன் : Rs. 21968

வெள்ளி

10 கிராம் : Rs. 388
1 கிலோ : Rs. 36295

ஏக்கத்தில் இருந்த நடிகையை கழட்டிவிட்ட நடிகர்

ஏக்கத்தில் இருந்த நடிகையை கழட்டிவிட்ட நடிகர்

சாந்தமான கிரிக்கெட் வீரர் தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் கதாநாயகியாக தன்னை நடிக்க வைப்பார் என்று ராய் நடிகை ரொம்பவும் ஏக்கத்தில் இருந்தாராம். ஏனென்றால், முன்னொரு காலத்தில் ராய் நடிகையும், இந்த கிரிக்கெட் வீரரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்து கொண்டிருந்தார்களாம். 

ஒருகட்டத்தில், சாந்தமான கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட் விளையாட்டில் பின்னடைவு வர, திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு, ராய் நடிகையுடனான நட்பையும் துண்டித்து விட்டாராம். இருப்பினும், ஏற்கெனவே இருந்த நட்பின் அடிப்படையில் அந்த கிரிக்கெட் வீரர் தனக்கு எப்படியாவது அவருடைய படத்தில் வாய்ப்பு தருவார் என்று ராய் நடிகை ரொம்பவும் எதிர்பார்த்தாராம்.

ஆனால், சாந்தமான கிரிக்கெட் வீரரின் மனைவியோ இவருக்கும் ராய் நடிகைக்கும் இருந்த நெருக்கத்தை மனதில் கொண்டு அவர் பக்கமே தலைகாட்டக் கூடாது என்று கிரிக்கெட் வீரரிடம் தடலாடியாக சொல்லிவிட்டாராம். அதன்பிறகே, ராய் நடிகைக்கு கல்தா கொடுத்துவிட்டு, வேறு நடிகையை படத்தில் ஒப்பந்தம் செய்தார்களாம்.

Copyright © 2016. Madurai Pages. All Rights Reserved.